"அரசு வழக்கறிஞர்களுக்கு நேர்மை, நன்னடத்தை அவசியம்"-உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

0 2099

அரசு வழக்கறிஞராக நியமிக்கப்படுபவர்கள் நேர்மை மற்றும் நன்னடத்தையுடன் இருப்பது அவசியம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் உரிமையியல் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக ஆரிப் ரகுமான் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் எனவே அந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர் ராஜா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். எம்.சுப்ரமணியம், ஆரிப் ரகுமான் நியமனத்தின்போது அவரது நடத்தை, தகுதி, கல்வித்தரம், அப்பதவிக்கு பொருத்தமானவரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படவில்லை எனக் கூறினார். 

காவல்துறையினர் ஆரிப் ரகுமானுடன் இணைந்து, அவருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர் என்று கூறிய நீதிபதி, அவரது நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments